புரெவி புயல்: பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ. தொலைவில் மையம்
புரெவி புயல், பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொள்ளும் என்றும் பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story