ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை
சென்னை அடுத்த பொன்னேரி அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன்,6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2.5லட்சம் ரொக்கமும் மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
சென்னை,
சென்னை அடுத்த பொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. உத்தகண்டிகை கிராமத்தில் ஒப்பந்ததாரர் முனிநாதன் வீட்டின் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகளுடன் 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ.2.5 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story