“உச்சநீதிமன்றத்தில் சமூக நீதிக்கு எதிரான வாதம் அதிர்ச்சியளிக்கிறது” - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
உச்சநீதிமன்றத்தில் சமூக நீதிக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சமூகநீதிக்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 69%-க்கும் கூடுதலாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் சார்பில் சமூகநீதிக்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் ஒப்புதலின்றி இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகளையும், அதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் சமூக நீதிக்கு எதிரான வழக்கறிஞர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story