முதலில் கட்சியை பதிவு செய்யட்டும்: ரஜினி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன்பிறகு அதுபற்றி பதில் கூறுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவகங்கை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி ‘‘ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும், அதற்கு பிறகு பதில் தருகிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘2ஜி வழக்கில் விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என எல்லோருக்கும் தெரியும். ஆ.ராசாவை சிறையில் அடைத்தது காங்கிரஸ் கட்சிதான். பா.ஜனதா அல்ல’’ என்றார்.
Related Tags :
Next Story