மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ என புதுப்பிரிவு உருவாக்கம் - கமல்ஹாசன் அறிவிப்பு


மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ என புதுப்பிரிவு உருவாக்கம் - கமல்ஹாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2020 8:30 PM IST (Updated: 5 Dec 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கூட்டணி குறித்த அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என தமிழக தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்கு தயார்ப்படுத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டங்களை அவ்வபோது நடத்திவருகிறார். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், ‘மய்யம் மாதர் படை’ என்னும் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மகளிர் அணியின் சென்னை மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன் தாஸ் மேற்பார்வையில் ‘மய்யம் மாதர் படை’ செயல்படும் எனவும், மக்கள் நலனிலும், தமிழகத்தைச் சீரமைப்பதிலும் ஒத்த நோக்கம் கொண்ட பெண்கள் இப்பிரிவில் இணைந்து செயல்படுவார்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story