சென்னையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இலவச உணவு - திட்டத்தை தொடங்கிய அமைச்சர் பாண்டியராஜன்
சென்னையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இலவச உணவு திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர்மழையால், சாலைகள் மட்டும் அல்லாமல், தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளிலும், மழை நீர் புகுந்துள்ளது.
மேலும் தொடர் மழையால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் படி சென்னை குடிசை வாழ் பகுதி மக்களுக்கு இன்று முதல் இலவச உணவு வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உணவு வழங்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் மக்களுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்தனர்.
சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவங்கள் மூலம் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை மூன்று வேளையும் பொதுமக்கள் எந்தவித கவலையும் இன்றி இலவசமாக உணவை வாங்கி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் குடிசைவாழ் பொதுமக்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை குடிசைவாழ் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில், மொத்தம் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story