“சமூக நீதியின் பாதுகாவலராக விளங்குபவரை நினைவு கூர்கிறேன்” - முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்


“சமூக நீதியின் பாதுகாவலராக விளங்குபவரை நினைவு கூர்கிறேன்” - முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்
x
தினத்தந்தி 6 Dec 2020 5:36 PM IST (Updated: 6 Dec 2020 5:36 PM IST)
t-max-icont-min-icon

சமூக நீதியின் பாதுகாவலராக விளங்கும் டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்வதாக முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடெங்கும் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story