பெங்களூருவில் பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்
பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட பெங்களூரு புறப்பட்டுள்ளார். கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்திக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு பிறந்த தினத்தை, பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொண்டாட அவர் சென்றுள்ளார். பெங்களூருவில் வரும் 12 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு, ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் 15 ஆம் தேதி முதல் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story