திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா; மத்திய பிரதேச முதல் மந்திரி பங்கேற்பு


திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா; மத்திய பிரதேச முதல் மந்திரி பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Dec 2020 5:33 AM IST (Updated: 7 Dec 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பங்கேற்கிறார்.

சென்னை,

இந்து மதம், தமிழ் கடவுள், தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற மோசமான பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை எழுச்சியுடன் நடந்தது.

வெற்றி வேல் யாத்திரையின் நிறைவு விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு, எல்.முருகன் தலைமை தாங்குகிறார். மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

விழாவில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.  இதனை தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

Next Story