முப்படை வீரர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி நாள் வாழ்த்து
முப்படை வீரர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள கொடி நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
‘கொடி நாள்’ தினம் என்பது போரின் போதும், அமைதியை நிலைநாட்டுவதிலும் படை வீரர்கள் புரிந்த சாதனைகளையும், தியாகங்களையும் நன்றியுடனும், பெருமையுடனும் நினைவு கூறுவதாகும். கொடி நாளானது, ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர்களின் நலன்சார்பில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தருணத்தில் அனைத்து படைகளின், நிலையிலான பதவிகளில் பணியாற்றும் வீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முப்படை வீரர்களின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்க முன்வருமாறு தமிழக மக்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story