''ஜெயலலிதா குற்றவாளி இல்லை'' ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் - ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி பேட்டி


ஜெயலலிதா குற்றவாளி இல்லை  ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் - ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2020 12:13 PM IST (Updated: 7 Dec 2020 12:13 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா முன்வைத்த விமர்சனத்திற்கு வழக்கறிஞர் ஜோதி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆ.ராசா பேசிய விவகாரத்தில் எனக்கு வருத்தம். ஜெயலலிதாவுக்காக 11 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எனக்கு தெரியும் என்பதால் நான் பதில் கூறுகிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என நீதிமன்றம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர்.

ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்.

ஜெயலலிதா இறந்துவிட்டதற்கான சான்றிதழை சசிகலா தரப்பு ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார்.சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story