முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்.
சென்னை,
வங்க கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கால்நடைகளும் பலியாகி உள்ளன. 20 ஆயிரம் கோழிகள் செத்தன. தொடர்ந்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். நாளை கடலூரில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் திருவாரூர், நாகையிலும் ஆய்வு செய்கிறார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் மழை நீர் தேங்கி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story