தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 49 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 753 ஆண்கள், 483 பெண்கள் என மொத்தம் 1,236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 55 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 233 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று 36 மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 4-வது நாளாக தொடர்ந்து பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 333 பேரும், கோவையில் 122 பேரும், செங்கல்பட்டில் 70 பேரும், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை, தென்காசியில் தலா 6 பேரும், ராமநாதபுரம், அரியலூரில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 23 லட்சத்து 10 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 996 ஆண்களும், 3 லட்சத்து 13 ஆயிரத்து 758 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 49 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரத்து 644 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 13 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
இதில், சென்னையில் 3 பேரும், வேலூரில் இருவரும், கோவை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருவாரூரில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 27 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரையில் 11 ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 1,330 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 292 பேரும், கோவையில் 112 பேரும், திருவள்ளூரில் 84 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 378 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 10 ஆயிரத்து 588 பேர் உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story