8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2020 5:10 AM IST (Updated: 9 Dec 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 
விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி, அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைப்பது மட்டுமின்றி மீண்டும் அங்கே நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது.

8 வழிச்சாலை உள்ளிட்ட எந்தவொரு திட்டத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுடைய நிலத்தை மத்திய அரசு அபகரிப்பதற்குத் தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story