நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்
நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.
நாகப்பட்டினம்,
புரெவி புயல் காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ள பாதிப்புகளை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாகையில் உள்ள நாகூர் தர்கா குளம் மழையால் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று பார்வையிட்டு வருகிறார். முதலில் நாகூர் தர்காவில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார்.
பின்னர், கருங்கண்ணி பகுதியில் விளைநிலங்களில் ஏற்பட்டு சேதங்களைப் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறார்.
தொடர்ந்து, பழங்கள்ளிமேடு , அருந்தவம்புலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து பிற்பகல் மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாடை, மொழையூர் ஆகிய பகுதிகளில் பயிர் சேதங்களையும், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள வெள்ள நிவாரண முகாமையும் முதல்வர் பார்வையிடுகிறார்.
Related Tags :
Next Story