வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை


வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை
x
தினத்தந்தி 9 Dec 2020 11:31 AM IST (Updated: 9 Dec 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நாகை,

நாகை மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதாவிற்கு தான் கொண்டு வந்த மாலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருட்தந்தையிடம் வழங்கினார். அவருக்கு மாதாவின் உருவத்துடன் கூடிய நினைவுப்பரிசை, அருட்தந்தை வழங்கினார்.

Next Story