சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை


சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை
x
தினத்தந்தி 9 Dec 2020 12:01 PM IST (Updated: 9 Dec 2020 2:33 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று  கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிதாக தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story