ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு தகுதி கிடையாது - அமைச்சர் கடம்பூர் ராஜு
ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு தகுதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு தகுதி கிடையாது. காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா பற்றி இந்த ஊருக்கே தெரியும்.
இப்படிப்பட்ட இழி நிலையில், ஏழரை கோடி மக்கள் இதயத்தில் இருக்கும்
ஜெயலலிதாவை அவர்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை, ஆ ராசாவிற்கு நாவடக்கம் வேண்டும். உலகத் தத்துவங்களை ஆ.ராசா பேசுகிறார். அதைவிட பேச எங்களுக்கும் பேச தெரியும். முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் ஏதோ ஓர் எழுத்து எழுதுவோம், இடிப்போம் என்று பேசுகிறார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் கைவைத்தால் கை வெட்டப்படும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ஜெயலலிதாவை பற்றி இழிவாகப் பேசி கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு ராஜா அல்ல ஓராயிரம் ராசா வந்தாலும் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்.
நாட்டுக்காகவோ, மக்கள் பிரச்சினைக்காகவோ ஆ.ராசா சிறை செல்லவில்லை ஜெயலலிதா பற்றி பேசினால் அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story