“2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ
2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
2ஜி வழக்கு குறித்து அண்மையில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் ஆ.ராசா பேசியிருந்தார். அப்போது அவர் 2ஜி வழக்கில் தன் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் இது குறித்து முதல்வருடன் விவாதிக்க தயார் என்றும் கூறினார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் அதன் பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்றும் தெரிவித்தார்.
ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவரும் நாட்டு பிரச்சினைக்கோ அல்லது மக்கள் பிரச்சினைக்கோ சிறைக்கு செல்லவில்லை என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஸ்டாலின், இதுவரை அதிமுக மீதான எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story