நிதிச்சுமையால் தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை: தமிழக அரசு


நிதிச்சுமையால் தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை:  தமிழக அரசு
x
தினத்தந்தி 10 Dec 2020 7:44 PM IST (Updated: 10 Dec 2020 7:44 PM IST)
t-max-icont-min-icon

நிதிச்சுமையால் தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்து உள்ளது.

சென்னை,

பேருந்துகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்த கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், நிதிச்சுமை காரணமாக, தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நிதி பற்றாக்குறை என்றால், பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா? என கேள்வி எழுப்பியது.

சென்னையில் தாழ்தள பேருந்துகளை இயக்கும் வகையில், தரமான சாலைகள் அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என கூறியதுடன், சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் தெரிவித்தது.

Next Story