தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது ; 11 மாவட்டங்களில் 10–க்கும் குறைவானவர்களுக்கு தொற்று


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது ; 11 மாவட்டங்களில் 10–க்கும் குறைவானவர்களுக்கு தொற்று
x
தினத்தந்தி 10 Dec 2020 9:39 PM IST (Updated: 10 Dec 2020 9:39 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. மேலும் 11 மாவட்டங்களில் 10–க்கும் குறைவானவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இன்று  (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 68 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 737 ஆண்கள், 483 பெண்கள் என மொத்தம் 1,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 36 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 255 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இன்று பெரம்பலூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 11 மாவட்டங்களில் 10–க்கும் குறைவானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 313 பேரும், கோவையில் 124 பேரும், ஈரோட்டில் 85 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 4 பேரும், கள்ளக்குறிச்சியில் 3 பேரும், திருப்பத்தூரில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 24 லட்சத்து 49 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 467 ஆண்களும், 3 லட்சத்து 14 ஆயிரத்து 739 பெண்களும், 3–ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 122 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 142 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், சென்னையில் 5 பேரும், கோவையில் 4 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், வேலூரில் இருவரும், சேலம், திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 11 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 928 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,012 பேருக்கும், ரெயில் மூலம் வந்த 428 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 424 பேருக்கும், கடல் மார்க்கமாக வந்த 34 பேருக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 1,302 பேர் இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 296 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும், கோவையில் 92 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 995 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 10 ஆயிரத்து 392 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,சிகிச்சையில் உள்ளவர்கள் விவரம் வருமாறு:-


மாவட்டம்மொ.பாதிப்புடிஸ்சார்ஜ்சிகிச்சையில் இறப்புடிச. 10
அரியலூர்4,6054,52829486
செங்கல்பட்டு48,50047,23253972983
சென்னை2,18,8562,11,7163,2423,898313
கோயம்புத்தூர்50,08048,500954626124
கடலூர்24,39224,0575727811
தருமபுரி6,2046,0211325110
திண்டுக்கல்10,52810,16516819516
ஈரோடு12,92612,39339114285
கள்ளக்குறிச்சி10,71810,588221083
காஞ்சிபுரம்28,04127,38123242854
கன்னியாகுமரி15,93015,52715025331
கரூர்4,9494,7771244810
கிருஷ்ணகிரி7,5747,29316711421
மதுரை19,99919,33322344329
நாகப்பட்டினம்7,8247,54715212516
நாமக்கல்10,68610,39518710428
நீலகிரி7,6287,3921944210
பெரம்பலூர்2,2472,2224210
புதுகோட்டை11,23510,999821546
ராமநாதபுரம்6,2506,088311314
ராணிப்பேட்டை15,72015,470711798
சேலம்30,60029,61553844771
சிவகங்கை6,3946,214541267
தென்காசி8,1527,917801554
தஞ்சாவூர்16,67316,29315122915
தேனி16,69816,4455519811
திருப்பத்தூர்7,3307,135711242
திருவள்ளூர்41,57840,48043566364
திருவண்ணாமலை18,83518,4241352766
திருவாரூர்10,63010,41111210711
தூத்துக்குடி15,82915,5561331408
திருநெல்வேலி15,01314,63816521012
திருப்பூர்16,02515,27653821151
திருச்சி13,68713,33318217218
வேலூர்19,71819,02835233842
விழுப்புரம்14,75114,563781108
விருதுநகர்16,06715,69214722817
விமான நிலையத்தில் தனிமை928924311
உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை10129991213
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,95,2407,72,99510,39211,853 1,220


Next Story