பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு தமிழக அரசு தகவல்
15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
1-1-2000-க்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள், வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்தப்பின் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.
பெயரினை பதிவு செய்ய கிராம ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சியில் செயல் அலுவலர் அல்லது துப்புரவு ஆய்வாளர், கன்டோன்மெண்ட்டில் துப்புரவு ஆய்வாளர், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர், அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிடுவீர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story