பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: தொட்டில் குழந்தை திட்டத்தால், 5 ஆயிரம் குழந்தைகளுக்கு புதுவாழ்வு சர்வதேச தின கருத்தரங்கில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: தொட்டில் குழந்தை திட்டத்தால், 5 ஆயிரம் குழந்தைகளுக்கு புதுவாழ்வு சர்வதேச தின கருத்தரங்கில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2020 4:36 AM IST (Updated: 11 Dec 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: தொட்டில் குழந்தை திட்டத்தால், 5 ஆயிரம் குழந்தைகளுக்கு புதுவாழ்வு சர்வதேச தின கருத்தரங்கில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, 

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தால் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது என்றும் சர்வதேச தின கருத்தரங்கில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான பன்னாட்டு தின தொடர் கருத்தரங்கு சென்னை பெருநகர மாநகராட்சி அம்மா மாளிகையில் நடந்தது. இதன் நிறைவு நாள் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றமே சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும் எண்ணிலா முன்னேற்ற திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியதின் பயனாக, தமிழகம் கடந்த 10 வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றது.

தாய்மார்கள் பெண் குழந்தையை பெற்றெடுத்தால், அது மிகப்பெரிய சுமை என்று கருதிய சில மாவட்டங்களில் இருந்த கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டுமென்று, தொட்டில் குழந்தை திட்டத்தை 1991-1996-ல் முதன் முதலாக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் பலனாக, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர் வி.சரோஜா, உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், கூடுதல் காவல்துறை தலைவர் சீமா அகர்வால், சமூகநலத்துறை செயலாளர் மதுமதி, புள்ளியல் துறை ஆணையர் டாக்டர். அதுல் ஆனந்த், மாநில திட்ட வளர்ச்சி குழுமத்தின் துறைத்தலைவர் ஆர்.வி.சஜீவனா, ஆஸ்திரேலியா சர்வதேச பெண்கள் அமைப்பின் நிர்வாகி சூசன் பெர்குசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story