பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது: முதல் அமைச்சர் பழனிசாமி
பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பாடுபட்ட மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று அன்றே முழங்கிய முண்டாசு கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார். பாரதி வாழ்ந்த இல்லத்தை ஜெயலலிதா, நினைவிடமாக மாற்றினார். பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்து கொண்டார்.
Related Tags :
Next Story