நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2020 10:28 AM IST (Updated: 12 Dec 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக் திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் 
ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!. நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்!” என்று பதிவிட்டுள்ளார்.



Next Story