தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு


தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு
x
தினத்தந்தி 12 Dec 2020 11:51 AM IST (Updated: 12 Dec 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,657-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 அதிரடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் 200 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,657-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.66.80-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 60 காசுகள் உயர்ந்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story