லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 100 சவரன் பறிமுதல்


லஞ்ச ஒழிப்பு துறை சோதனை:  விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 100 சவரன் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Dec 2020 4:54 PM IST (Updated: 12 Dec 2020 4:54 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் 100 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் சோதனையில் ரூ.25 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  மதுரை வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் மற்றும் விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோரிடம் இருந்து இவற்றை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story