தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 6:41 PM IST (Updated: 12 Dec 2020 6:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.  தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இது நேற்றைய எண்ணிக்கையை விட (1,235) சற்று குறைவாகும்.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை இன்று 1,296 ஆக உள்ளது.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 ஆக உயர்வடைந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 ஆக உள்ளது.  கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,870ல் இருந்து 11,883 ஆக உயர்ந்து உள்ளது.  10,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story