'இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை' ரஜினிகாந்த் கேக் வெட்டும் படத்தை பகிர்ந்த செளந்தர்யா ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தை இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்தனர். இதனால், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், ரஜினி பிறந்தநாளில் அவர் கேக் வெட்டும் படத்தை அவரின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் 'எனது வாழ்விற்கு இனிய பிறந்தநாள், அன்புள்ள அப்பா' என்று எழுதியுள்ளார். அந்த கேக் 'நவ் ஆர் நெவர்' அதாவது 'இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை' எனும் எழுத்து வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
Happy birthday my life .. dearest appa ❤️❤️❤️😇😇😇 #NowOrNever 🤘🏻🤘🏻🤘🏻😀😀😀 #ThalaivarBirthday#OneAndOnlypic.twitter.com/3BYztWitd5
— soundarya rajnikanth (@soundaryaarajni) December 12, 2020
Related Tags :
Next Story