இந்த ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம்: தஞ்சை பெரியகோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


இந்த ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம்: தஞ்சை பெரியகோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2020 1:08 AM IST (Updated: 13 Dec 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது.

தஞ்சாவூர்,

சனிப்பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் சனிப்பிரதோஷமாக நேற்று வந்தது. இதையொட்டி உலக பாரம்பரிய சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவிலில் நேற்று மாலை பெரிய நந்திபெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் மற்றும் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சனிப்பிரதோஷம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அடுத்த சனிப்பிரதோஷம் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வருகிறது.

Next Story