உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை - விஜய பிரபாகரன்


உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை - விஜய பிரபாகரன்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:40 AM IST (Updated: 13 Dec 2020 10:40 AM IST)
t-max-icont-min-icon

உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் இன்று (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். இதில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விஜய பிரபாகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது.  3-வது அணி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் தைரியமாக அமைப்போம். உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என்று விஜய பிரபாகரன் கூறினார்.

Next Story