கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - மு.க.ஸ்டாலின்


கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Dec 2020 2:16 PM IST (Updated: 13 Dec 2020 2:16 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மக்களுக்கு தேவை என்பதால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



Next Story