கொரோனாவில் இருந்து ‘ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு


கொரோனாவில் இருந்து ‘ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2020 12:17 AM IST (Updated: 14 Dec 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து ‘ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு வருமாறு:-

கொரோனாவுக்கு எதிராக போராடும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னுடைய பிரார்த்தனை அவருடன் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல தமிழக பா.ஜனதா தலைவர் முருகனும் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story