கோவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி பலி
சோளிங்கர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவி கோவில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோகநரசிம்மர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் வந்தனர். அவர்கள், யோகஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்னமலை அடிவாரத்தில் உள்ள பாண்டவ தீர்த்தகுளத்திற்கு சென்றனர். அவர்களுடன் வந்த ஜெகன் (வயது 18), அபிநயா (14) ஆகியோரும் அந்த தீர்த்தகுளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான இடத்தில் இறங்கியதால் தண்ணீரில் தத்தளித்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். எனினும் ஜெகனும், அபிநயாவும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஜெகன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டும், அபிநயா அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். கோவிலுக்கு வந்த இடத்தில் இருவரும் இறந்த தகவலை அவர்களின் பெற்றோருக்கு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story