நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அனுமதி


நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்கலாம்  - மாவட்ட ஆட்சியர் அனுமதி
x
தினத்தந்தி 14 Dec 2020 1:54 PM IST (Updated: 14 Dec 2020 1:54 PM IST)
t-max-icont-min-icon

நாளைமுதல் குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.


சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கபட்டது. 

 இந்த நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி  வழங்கி மாவட்ட  கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story