சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2020 3:23 PM IST (Updated: 14 Dec 2020 5:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா என்ற செய்தி #IITMadras என்ற ஹேஷ்டாக் உடன் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. டுவிட்டரில் பலரும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாக கருத்து பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில் ஐ.ஐ.டியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா அறிகுறி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 2 மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 

Next Story