தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: விஜயகாந்த் கண்டனம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். 4 விசைப்படகுகளில் இருந்த 28 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story