மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் சிக்கிய வாகனம் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு


மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் சிக்கிய வாகனம் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 1:48 PM IST (Updated: 16 Dec 2020 1:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மதுரவாயல் பகுதியில் பாலத்தின் அடியில் சிக்கிய கண்டெய்னர் லாரியை பல மணி நேரம் போராடி மீட்புப் படையினர் வெளியே மீட்டனர்.

சென்னை,

மிகப்பெரிய கண்டெய்னர் லாரியில் மின்மாற்றி ஏற்றப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, சென்னை மதுரவாயல் பாலத்தின் அடியில் திடீரென லாரி சிக்கிக் கொண்டது. முன்னும் பின்னும் நகர முடியாமல் சிக்கி தவித்தது. 

இதனால் அப்பகுதியில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

லாரியை அப்பகுதியில் இருந்து அகற்ற, பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட மின் மாற்றியின் மேல்பகுதியை வெல்டிங் மூலம் குறைக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது. 

இதனால் நிலைமை விபரீதமானது. எனினும், மீட்புக் குழுவினர் சாமர்த்தியமாக செயல்பட்டு, உடனடியாக லாரியை இயக்கி பாலத்தில் இருந்து மீட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story