மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை தரிசனத்திற்கு அனுமதி
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை,
மார்கழி மாத பிறப்பையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும், அதிகாலை 4.30 மணிக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்கழி மாத திருப்பள்ளி பூஜைகள் இன்று முதல் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது, பக்தர்களுக்கு திருஞானசம்பந்தரின் நினைவாக திருஞானப்பால் வழங்கப்பட உள்ளது. அதிகாலை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story