கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடம் இதுவரை 9 கோடி ரூபாய் அபராதம் வசூல் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் இதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களின் ஒத்துழைப்பால் தமிழகத்தில் 60 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 12 லட்சம் பேரிடம் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story