பிற கட்சிகள் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
எத்தனை அணிகள் வந்தாலும் அ.தி.மு.க. தான் முதல் அணியாக இருக்கும். பிற அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பெரம்பூர்,
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி அமைப்பது கட்சிகளின் விருப்பம். நடிகர்கள் கமல்-ரஜினி கூட்டணி அமைப்பது அவர்களது தனிப்பட்ட கருத்து. மீண்டும் 2021-ல் ஆட்சியை கைப்பற்றி, அ.தி.மு.க.வை விட வலிமை பெற்ற சக்தி ஏதுமில்லை என நிரூபிப்போம்.
உள் ஒன்று வைத்து, புறமொன்று பேசுபவர் கமல். எம்.ஜி.ஆரின் வாக்குகளை அவர் வாங்க நினைத்தால், அது கானல் நீராகத்தான் போகும். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள், வேறு கட்சிக்கு வாக்களிக்காது. வாங்கவும் முடியாது.
பிற அரசியல் கட்சிகள், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவது, சந்தர்ப்பவாதத்தின் உச்சம். 3-வது அணி, 4-வது அணி உருவானால்கூட முதல் அணியாக அ.தி.மு.க. தான் இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்தது தி.மு.க.தான்.
கல்லூரிகளில் கொரோனா பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்லூரிகளை மூடுவது குறித்து, அரசு ஆலோசனை செய்து, முதல்-அமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story