“அரசு எவ்வழி - அதிகாரிகள் அவ்வழி” - கமல்ஹாசன் டுவீட்
பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் நிறுவனரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத ரூ.7.58 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 33 அரசு ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்ற புள்ளி விவரம் நேற்று வெளியான நிலையில், கமல்ஹாசன் இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020
Related Tags :
Next Story