7.5% இடஒதுக்கீடு: மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் - தேசிய மருத்துவ ஆணையம்
7.5% இடஒதுக்கீட்டில், மருத்துவ இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சீட் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story