டார்ச் லைட் சின்னம் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கோரிக்கை
எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் மாற்றுச்சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
டார்ச் லைட் சின்னத்திற்கு பதிலாக, எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களை ஒதுக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி லைட் சின்னம் ஒதுக்கியது ஏற்புடையது அல்ல. எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் கழுத்துப் பட்டை, படகோட்டும் மனிதன், தொப்பி, கை வண்டி ஆகிய சின்னங்களை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் மீண்டும் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கூறியுள்ளதால் அந்த சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story