“வீட்டில் இருந்தே அறிக்கை விடுகிறார் ஸ்டாலின்” - அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை சந்திக்காமல் வீட்டில் இருந்தே அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை,
கோவை காந்திபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே அறிக்கை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்தவர் முதலமைச்சர் பழனிசாமி என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை சந்திக்காமல் அறிக்கைகளை மட்டும் வெளியிடுகிறார் என்றும் அவர் கூறினார். மேலும் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Related Tags :
Next Story