ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தில் கைவரிசை - செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மாயம்


ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தில் கைவரிசை - செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மாயம்
x
தினத்தந்தி 20 Dec 2020 4:40 PM IST (Updated: 20 Dec 2020 4:40 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த துரைநல்லூர் கிராமத்தில் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு எலக்ட்ரானிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, ஆன்-லைனில் ஆர்டர் செய்பவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நிறுவனத்தில் 12 விலைய உயர்ந்த செல்போன்கள்,  37 புளூடூத்கள் மற்றும் 6 கைக்கடிகாரங்கள் என ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து அங்கு பணியாற்றிய தினேஷ், பவித்ரன், கிஷோர், கௌதம், காவியா என 5 ஊழியர்களை கைது செய்துள்ளனர்.


Next Story