தமிழகத்தில் மேலும் 1,114 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 1,114 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 Dec 2020 8:36 PM IST (Updated: 20 Dec 2020 8:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 1,114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மேலும் 1,114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேர் குணம் அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 06 ஆயிரத்து 891- ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்து 315-ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 11,983- பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story