கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 என தருவது தான் தமிழக அரசியல் - அண்ணாமலை பேச்சு
தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 என தருவதுதான் தமிழக அரசியல் என்று பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை,
கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2000 ஆக தருவது தான் தமிழக அரசியல். ரூ.2000 நம்பி 5 ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது.
பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் என்றார்.
Related Tags :
Next Story