ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தன் 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு, பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் என்று குறிபிட்டுள்ளார்.
Related Tags :
Next Story