பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? - அரசு செயலாளர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு


பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? - அரசு செயலாளர்களுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2020 11:14 PM GMT (Updated: 21 Dec 2020 11:14 PM GMT)

அரசின் வருவாய்-செலவு நிலை எப்படி இருக்கிறது? என்றும், பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அரசு செயலாளர்களுடன், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

சென்னை, 

நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 6 மாதங்கள் கழித்து, ஒரு இடைக்கால ஆய்வு கூட்டம் நடத்தவேண்டும். அந்தவகையில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இடைக்கால ஆய்வு கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், நிதித்துறை அரசு கூடுதல் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அனைத்து துறைகளின் அரசு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டதா? அல்லது அதை நிறைவேற்றும் நிலைமை எந்த அளவில் இருக்கிறது? என்பது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. இதுதவிர அரசின் வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு? வருவாய் பற்றாக்குறை எவ்வளவு? நிதி பற்றாக்குறை எவ்வளவு? வருமானத்தை சீராக ஆக்கும் வகையில் அதை சரி செய்ய என்ன வழி? என்பது போன்ற நிதி தொடர்பான பல்வேறு நிலைமை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பால் அரசுக்கு நிதி எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது? எவ்வளவு செலவு அதிகரித்திருக்கிறது? என்பது குறித்தும் துறை வாரியாக மிக விரிவான விவாதம் நடந்தது. ஒவ்வொரு அரசு துறை செயலாளர்களும் தங்களுடைய துறை குறித்த இந்த விவரங்களை எடுத்துக்கூறினர்.


Next Story